கொரோனா தொற்று நோய் சுமார் 195 நாடுகளை பாதித்துள்ளது.

டோக்கியோ: கொரோனா தொற்று நோய் சுமார் 195 நாடுகளை பாதித்துள்ளது. பல நாடுகள் மக்கள் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க உத்தரவிட்டுள்ளது. பொதுநிகழ்ச்சிகள், மால், திரையரங்கம், அலுவலகம் என பலவற்றுக்கு மக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் 6 மாதம் தங்கள் எல்லையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இப்படியாக மக்கள் வெளியே வரக்கூடாது என பல உத்தரவுகளை உலக நாடுகள் பிறப்பித்துள்ள நிலையில், சுமார் 12 கோடிக்கும் மேலான மக்கள் வாழும் நாடாகவும், தொழில்துறையில் சிறந்து விளங்கும் நாடாகவும், அதிக முதியவர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் உள்ள ஜப்பான், மிக சாதாரணமாக இயங்குகிறது. மக்கள் அலுவலகம் செல்கின்றனர், குறிப்பிட்ட சில அலுவலகங்கள் மட்டுமே வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது. உணவகங்கள், பார், திரையரங்கம் என அனைத்தும் திறந்திருக்கிறது.


சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், ஜப்பான் நாட்டிலும் பரவியது. அங்கும் 1500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரையிலும் 49 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் அங்குள்ள மக்களுக்கு எந்த தடையும் இல்லை. வாடகை கார் எடுத்து ஜப்பான் மத்தியில் இருந்து நாட்டு எல்லை வரை சென்று திரும்ப முடியுமாம். மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது, வாகனங்களை சோதனையிடப்படுகிறது, ஆனால் பயணம் செய்யத் தடை இல்லை. பாதுகாப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் கொரோனாவுள்ளதால் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.