சென்னை: தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது,
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறுகையில், இன்று(ஏப்.,2) 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில் 74 பேர் டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். இதன் மூலம் மாநாட்டில் பங்கேற்ற 264 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மாநாட்டில் பங்கேற்ற 1,103 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சிலருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. 86,342 பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.
90 பேர் அரசின் தனிமைபடுத்தப்பட்ட முகாம்களில் உள்ளனர். 28 நாள் கண்காணிப்பு முடிந்து 4070 பேர் வீடு திரும்பியுள்ளனர். அனைத்து நோயாளிகளின் உடல்நிலையும் சீராக உள்ளது. சிகிச்சை முடிந்து 7 பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் மேலும் 6 ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது. நோய் பாதிப்பில் தமிழகம் தற்போது இரண்டாவது நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதன் மூலம், இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்திற்கு வந்துள்ளது.